பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடுடிசம்பர் 29,2012,08:04 IST
எழுத்தின் அளவு :

சென்னை: பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், நேற்று, வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வுகள், அக்டோபரில் நடந்தது.
இத்தேர்வு முடிவுகள், www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டது. மறு மதிப்பீட்டிற்கான, விடைத்தாள் நகல் பெற, விரும்புவோர், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.