ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு? | Kalvimalar - News

ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு?டிசம்பர் 28,2012,10:07 IST

எழுத்தின் அளவு :

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.

அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து

தமிழ் பிரிவுக்கான இடங்களை நிரப்ப trb மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கும் பனி நடை பெரும் என தெரிவித்துள்ளது. ஆனால் கணிதம், இயற்பியல் ,மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கல்வி முதுகலை பட்டபடிப்பில் இல்லை.எனவே .அதற்கு அடுத்த படியாக உள்ள தேர்வர்களை trb தேர்ந்தெடுக்குமா?????????????
by Deepika,India    30-டிச-2012 00:13:11 IST
Computer science ene ungalukku oru subjecta theriyala? Athai patthi consider panna mattengala?
by A.Pushbarathi,India    28-டிச-2012 20:05:25 IST
நன்றி தினமலர்
by unmai,India    28-டிச-2012 11:07:57 IST
தேங்க்ஸ் போர் யுவர் information. பிளஸ் அப்டேட் pg salary
by பிரதீப்,India    28-டிச-2012 10:13:00 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us