இந்தியாவில், வரும் கல்வியாண்டு முதல், இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, "ஒரு நாடு, ஒரு தேர்வு" என்ற அடிப்படையில் ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது. 2013 ஏப்ரலில் நடைபெறும் இத்தேர்வுக்கு 14.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 1.5 லட்சம் பேர் ஜே.இ.இ.,(கூடுதல் தேர்வு) எழுத தகுதியுடைவர்கள். இவர்களே ஐ.ஐ.டி., போன்ற உயர்ந்த மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில முடியும்.
மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஜே.இ.இ.,(முதன்மை) தேர்வை இந்தாண்டு, ஆன்லைன், ஆப்லைன் முறைகளில் நடத்துகிறது. ஆப்லைன் தேர்வுக்கு நாடு முழுவதும் 12.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் தேர்வுக் கட்டணம் இல்லாமல் விண்ணப்பித்தோர் 1.08 லட்சம் பேர். இவர்கள் தவிர மற்றவர்கள், தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் தேர்வுக்கு, 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோசி கூறுகையில், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.,15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு போன்றே இருக்கும். பாடத் திட்டம் மாற்றப்படவில்லை. தேர்வின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., டில்லி தொழில்நுட்ப பல்கலை, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைகள் மற்றும் கல்லுõரிகள், குஜராத், நாகலாந்து மாநிலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுõரிகளில் மட்டுமே, இந்தாண்டு ஜே.இ.இ., முதன்மை தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.
அதிக மதிப்பெண்களில் எடுக்கும் 1.5 லட்சம் மாணவர்கள், ஜே.இ.இ., கூடுதல் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றார்.