கிளாசிகல் கோர்ஸ்+ எனும் புதிய கற்பித்தல் செயல்முயற்சி | Kalvimalar - News

கிளாசிகல் கோர்ஸ்+ எனும் புதிய கற்பித்தல் செயல்முயற்சிடிசம்பர் 26,2012,15:01 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னையை தளமாகக் கொண்டு இயங்குகின்ற, ஆன்லைன் சமூக கற்றல் தளமான கிளாசிகல் நாலேஜ், மாணவர்களுக்கு முழுமையான வடிவில், கல்வித் திட்டங்களை வழங்குகின்ற ஒரு தனித்துவ செயல்முறையான கிளாசிகல் கோர்ஸ்+ என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியாக கற்றல் என்ற கருத்தாக்கத்தை இது மேம்படுத்தும்.

வழக்கமான கல்லூரி வகுப்பு நேரங்களில் இது குறுக்கீடு செய்வதில்லை என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. நிபுணர்களின் விளக்க உரைகளோடு, மாணவர்கள் தங்களின் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள அனுமதித்தல், வினா-விடை போட்டிகளில் பங்கேற்றல், குறிப்புகளை பரிமாறிக்கொள்ளுதல், நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுதல் உள்ளிட்ட பலவிதமான சிறப்பம்சங்கள் இவற்றில் உள்ளன.

கோர்ஸ்+ அறிமுகத்தோடு சேர்த்து, ஐடி பாடத்திட்டங்கள் தமிழில் தொடங்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராமப்புற மாணவர்கள் பெரியளவில் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைப்பற்றிய மேலதிக தகவல்களுக்கு, 9884471060/9600130407 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us