பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம் | Kalvimalar - News

பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்டிசம்பர் 26,2012,08:49 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020" இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும். இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்" போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

வெரி குட் கல்வி தரம் வளரும். அரசின் பரிந்துரைக்கு நன்றி வணக்கம்
by ரவிச்சந்திரன்,India    26-டிச-2012 16:11:58 IST
புத்தகமாக இருந்தால் பகல் நேரத்தில் மின்சாரம் இல்லாமலும் படிக்கலாம். கம்ப்யூட்டர் சி டி என்றால் மின்சாரம் இல்லை அதுனால படிக்கலைன்னு சொல்லிடுவானுங்க பசங்க
by கணபதி,Sudan    26-டிச-2012 15:50:42 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us