முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு | Kalvimalar - News

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்புடிசம்பர் 26,2012,10:02 IST

எழுத்தின் அளவு :

கன்னிவாடி: இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி..டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.

டி..டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன,&'&' என்றார்.


வாசகர் கருத்து

தயவு செய்து பி.காம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை ஏற்படத்தவும் எல்லா இளங்கலை செல்லும்
by Murugavel,India    27-டிச-2012 10:12:51 IST
நல்லதுதான் .. முதல்ல 2010-11, 2011-12 Batchன் convocation ஐ கொடுங்கயா .
by Rufus,India    27-டிச-2012 10:05:45 IST
இந்நிலை நீடித்தால் தேசிய அளவில் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்ன பயன். உயர்கல்வியில் உலக தரத்தை அடைவதெல்லாம் சாத்தியமல்ல.. தரம் தாழ்ந்து தான் போகும்..
by Saravanan,India    27-டிச-2012 01:49:19 IST
continued.. பணி அனுபவம் இருக்கனும்ங்கற விதிமுறை மூலமா அரசு தனியார் கல்லூரியில் பணிபுரிய கட்டாயப்படுத்துன்னு தானே அர்த்தம்.. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களை திறமை அடிப்படையில் தேர்வு நடத்தி தெரிவு செய்யும்போது அரசு கலைக்கல்லூரி விரிவுரையளர் தேர்வில் மட்டும் பணி அனுபவத்திற்கு 50% மதிப்பெண் எதற்க்கு..
by Saravanan,India    27-டிச-2012 01:24:06 IST
இதெல்லாம் சரி.. இப்ப இருக்கும் விதிமுறை படி Freshers யாரும் விரிவுரையாளர் ஆக முடியாதுங்கறது சரிதனா.. பனி அனுபவத்துக்கு பாதி மார்க் போட்டா திறமையானவங்க எல்லாம் தனியார் கல்லுரிகளில் 7 வருசம் பணி செய்யனும்னு அர்த்தமா.. அப்புறம் அங்கு பயிலும் மாணவர்களோட தரம் எப்படி நல்லா இருக்கும்.
by Saravanan,India    27-டிச-2012 00:47:50 IST
தற்போது முடிபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாடு 20 அல்லது 10 வருடம் வேலைக்காக காத்திருப்போர் பதிப்புக்கு ஊள்ளவர்கள்.
by தி.சந்திரசேகரன் ,India    26-டிச-2012 18:31:40 IST
நான் b.காம் படித்து இருகிறேன் . நான் b.ed படிக்கலாமா
by SRI,India    26-டிச-2012 16:30:06 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us