ஆசிரியர்கள் சம்பள பட்டியல் சாப்ட்வேரில் குளறுபடி | Kalvimalar - News

ஆசிரியர்கள் சம்பள பட்டியல் சாப்ட்வேரில் குளறுபடிடிசம்பர் 24,2012,08:44 IST

எழுத்தின் அளவு :

ராமநாதபுரம்: தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட சம்பள கணக்கு "சாப்ட்வேரில்" உள்ள குளறுபடியால், மூன்று மாதங்களாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் நிலுவை தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருச்சி, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனைத்து துறைகளிலும், சம்பள பட்டியல் தாக்கல் செய்ய, 8.21 வெர்சன் என்ற புதிய சாப்ட்வேர் 3 மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஓய்வூதியதாரர்கள் ஈட்டிய, ஈட்டா விடுப்பு பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், சி.பி.எஸ்., சில் பொது, எய்டட், ஊராட்சி, நகராட்சி என, நான்கு வகை இருக்கும்.

தற்போது, ஊராட்சி, நகராட்சி என்ற தலைப்புகள் எய்டட் தலைப்பில் வருவதால், எதிர்காலத்தில் இவைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சாப்ட்வேரில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி தொகை ஐந்து டிஜிட்டிற்கு மேல் சென்றால், சாப்ட்வேர் ஏற்றுகொள்வதில்லை.

தற்போது ஆசிரியர்கள் பெரும்பாலும், அடிப்படை சம்பளம் 25 ஆயிரத்திற்கு மேல் பெறுவதால், அகவிலை மற்றும் வீட்டு வாடகைப்படி ஐந்து டிஜிட்டிற்கு மேல் வருகிறது. இதனால், பில் தயார் செய்ய முடியவில்லை. கடந்த 31.10.2012 முதல் ஓய்வு பெற்ற பல ஆசிரியர்கள் ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பு பணம் பெறமுடியாமல் உள்ளனர்.

மேலும் ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதியம் உரிய கணக்கில் செல்லாமல், வேறு கணக்கில் செல்வதால் பெரும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலை, மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ளது. இதை சென்னை கணக்கு துறையிலிருந்து தான் சரி செய்ய முடியும், என்றார்.


வாசகர் கருத்து

இந்த சாப்ட்வேரில் சம்பளம் அல்லாத ( non salary ecs) இல் பல தலைப்புகள் வேலை செய்வதில்லை EL surrrer 8.2.1 இல் போட்டால் டோக்கன் போடமுடியாது அதை 8.2 என்ற பழைய சாப்ட்வேரில் போட்டால் டோக்கன் போடமுடியும். AIDED C.P.S set செய்தால் C.P.S பணம் பிடிக்காது. GOVT C.P.S set செய்தால் தான் C.P.S பணம் பிடிக்கும். நிச்சயமாக இதில் NIC ஐ குறை சொல்ல முடியாது விவரங்களை நிக்- கிடம் சரியாக எடுத்து சொல்லி இருந்தால் இந்த மாதிரி தவறு நடந்து இருக்காது. அல்லது Software Feedback கேட்டு இருக்கவேண்டும்
by Rajaram G ,India    25-டிச-2012 07:20:18 IST
சாப்ட்வேரில் மாஸ்டர் என்ற போல்டரில் டேட்டா என்ற சப் - போல்டரில் சென்று விஷுவல் பாக்ஸ் கட்டளை கொடுத்து 5 digit என்பதை 10 digit என மாற்றிக் கொள்ளவும்.
by sankar,India    24-டிச-2012 20:49:45 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us