கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம் | Kalvimalar - News

கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம்டிசம்பர் 25,2012,08:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளி கல்வித்துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், ஆன்-லைன் கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.


வாசகர் கருத்து

when next announcement?
by mariappan m,India    24-டிச-2012 12:48:36 IST
தினமலர செய்திகளை தருவதில் என்றும் முன்னோடிதான்
by ப.ஆசைதம்பி,India    24-டிச-2012 08:50:28 IST
தினமலர செய்திகளை தருவதில் என்றும் முன்னோடிதான்........
by ப.ஆசைதம்பிKARUR,India    24-டிச-2012 08:48:17 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us