விலையில்லா லேப்-டாப் விற்பனை? கல்வித்துறை அதிர்ச்சி | Kalvimalar - News

விலையில்லா லேப்-டாப் விற்பனை? கல்வித்துறை அதிர்ச்சிடிசம்பர் 23,2012,09:53 IST

எழுத்தின் அளவு :

கோவை: தமிழக அரசால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா லேப்-டாப்கள் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விற்கும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக விலையில்லா லேப்டாப் வழங்கி வருகிறது. இதற்காக, கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.912 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் வழங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப்கள் மறைமுகமாக 5 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் , சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

அந்த பணத்தில் சில மாணவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், குடும்ப வறுமைக்காக விற்பனை செய்யும் மானவர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கோவை கல்லூரி கல்வி இணை இயக்குனர் கதிரேசன் கூறுகையில், "விலையில்லா லேப்டாப் என்பது மாணவர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது; இதை விற்பது என்பது சட்டப்படி குற்றம். அரசின் சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்பது தவறு; விலையில்லா லேப்டாப் விற்பதும், வாங்குவதும் தெரிந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,&'&' என்றார்.


வாசகர் கருத்து

லாப்டப் மாணவர்களிடம் தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது.engineering மெடிக்கல் மற்றும் முக்கியமான padippkku கொடுக்கலாம்.ஆர்ட்ஸ்,பிளஸ் 2க்கு தேவை இல்லை.
by jaisankar,India    24-டிச-2012 22:35:55 IST
விலை இல்லா மடிக் கணினிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாகச் சொந்தமாக்கிக் கொள்ளாமல் படிப்புக்காலல் பயன்பாட்டிற்கு என வழங்கப்படவேண்டும். பின்னர் படிப்பு முடித்தவுடன் அவற்றைப் பள்ளி கல்லூரிகளிலேயே திருப்பி ஒப்படைத்துவிடவேண்டும், அடுத்த ஆண்டு மாணவர்களுக்காக. இதனால் திரும்பத் திரும்ப அவற்றிற்காக அரசு பணம் செலவிட வேண்டியதில்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கணினி வங்கி என நிர்வகிக்கவேண்டும்.
by எம்.டி.ஜெயபாலன்,India    24-டிச-2012 06:35:46 IST
குடுத்தவங்க கிட்ட இன்னும் லேப்டாப் இருக்கான்னு அப்பப்போ பரிசோதனை செய்யிங்கப்பா...
by jessy,India    23-டிச-2012 12:41:49 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us