பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடக்கம் | Kalvimalar - News

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்டிசம்பர் 19,2012,08:37 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட காலாண்டுத் தேர்வைப் போலவே, அரையாண்டு தேர்வும் பொதுத் தேர்வை போல் நடத்தப்படுகிறது.

பிற வகுப்பு மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்தன. இதனால், அவர்கள், ஆண்டு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக, அரசுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும், ஆண்டு பொதுத் தேர்வை போல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி, செப்டம்பரில், காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இன்று முதல், அரையாண்டு பொது தேர்வுகள் துவங்குகின்றன.

மாநில அளவிலான இத்தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒரே கேள்வித்தாள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, வழக்கம் போல், மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் என, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து

kalvimalar education news best more new news give dinamalar groups thanks dinamalar
by A Subbiah,India    19-டிச-2012 20:54:23 IST
மாணவர்கள் பரிட்சைக்கு தயார்
by சுதர்சன்,India    19-டிச-2012 18:35:48 IST
all tha best
by sathya .k,India    19-டிச-2012 17:57:55 IST
எக்ஸாம் எக்ஸாம் நோ ரிசல்ட் செட் ரிசல்ட் ........
by VASANTHRAKUMAR,India    19-டிச-2012 09:57:17 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us