டிசம்பர் 23ல் தேசிய இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வு | Kalvimalar - News

டிசம்பர் 23ல் தேசிய இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வுடிசம்பர் 18,2012,07:55 IST

எழுத்தின் அளவு :

காரைக்குடி: சி.எஸ்.ஐ. ஆர், யு.ஜி.சி., சார்பில், இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதி தேர்வு, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம், அழகப்பா இன்ஜி., கல்லூரி, பாலிடெக்னிக் உட்பட 13 மையங்களில் டிசம்பர் 23ம் தேதி நடக்கிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த எம்.எஸ்.சி., இன்ஜினியரிங் படித்த, 5,012 பேர் இதில் பங்கேற்கின்றனர்.

காலை 9 முதல் பகல் 12 மணி வரை இயற்பியல், உயிரியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் சார்ந்த அறிவியல் பாடங்களுக்கும், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை வேதியியல், பொறியியல், கணிதவியல் பாடங்களுக்கும் தேர்வு நடக்கும். அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் டில்லியிலிருந்து ஏற்கனவே நுழைவு சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் www.csirhrdg.res.in இணையதளத்தில், வரிசை எண், ஆவணங்களை சரிபார்த்து, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், உரிய ஆவணங்களுடன் வந்து, டிசம்பர் 22ம் தேதி காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில், தேர்வுக்கான நகல் நுழைவு சீட்டை பெறலாம்.

நுழைவு சீட்டு பெற்றவர்கள், அதில் புகைப்படம் சரியான முறையில் "ஸ்கேன்&' ஆகாமல் இருந்தால், தேர்வு எழுத வரும்போது, இரண்டு ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு தேர்வு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமியை 94438 50679, 94436 09776 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us