"வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்" | Kalvimalar - News

"வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்"டிசம்பர் 18,2012,07:51 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது. அப்போது, தேர்வாணைய தலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும். தினமும், 300 பேர் வீதம் அழைக்கப்படுவர். "ரேங்க்" அடிப்படையில், அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி..., பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், நவ.,30ல் வெளியானது.

இதையடுத்து, இம்மாத இறுதியில் இருந்து, கலந்தாய்வு நடக்கும். அதன்பின், குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

யு ஆர் கிரேட் சார், வாழ்த்துக்கள்.
by பாஸ்கர்.S,India    18-டிச-2012 22:41:21 IST
இவரது பணி சிறப்பானது , வாழ்த்துக்கள்
by Ravichandran,India    18-டிச-2012 22:11:44 IST
தமிழ் வழி மாணவர்கள் நிலை குரூப்-2 exserviseman 5%..but instead .. woman 30% but instead bc general cutoff 231...ஆனால் bc pstm cutoff 234 ....sc gen -232...sc pstm -234 ....injustice of tamil medium canditate
by shinijel,India    18-டிச-2012 21:19:10 IST
சீர்திருத்தம் என்ற முறைபடி விடை தாள் ஒளிம நகல் இணையதளத்தில் வருமா
by vivek,India    18-டிச-2012 18:30:28 IST
2011 vao reserve லிஸ்ட் validity இன்னும் இருக்கா, கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
by raja,India    18-டிச-2012 18:22:17 IST
ஹாய் கார்த்திகேயன் அவர் தனி நபர்கள் வாங்கிய மார்க்கை வெளியிட்டுவிட்டார் உங்களுக்கு தெரியாதa?
by geevaa,India    18-டிச-2012 16:14:32 IST
மதிபுகுரிய ஐயா வணக்கம். செப்டெம்பர் 1-ம் தேதி நுலகர்களுக்கான தேர்வு நடைபெற்றது அதற்கான முடிவுகள் எப்போது தெரியும். நான்கு மாதங்களகயும் இன்னும் தெரியவில்லை. உடனே வெளியிடவும்
by சித்திரைவேல் சு ,India    18-டிச-2012 14:10:47 IST
தேர்வு எழுதி முடித்தவுடன் சரியான பதில் எது என்று வெளியிட்ட இவரால் ஏன் தனி தனி நபர்கள் வாங்கிய மார்க்கை வெளியிட முடியல ....... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா ...... அப்பதான இவரு பண்ணுன நல்லதெல்லாம் வெளியில தெரியது ....
by கார்த்திகேயன்,India    18-டிச-2012 12:20:23 IST
தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது பெரிய வேண்டுகோள் கடினமாக படித்து திறமை உள்ளவர்கள் மட்டுமே அரசு பணியில் சேர வேண்டும் ஆகையால் நடராஜ் அவர்களே தொடர்ந்து இந்த தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று தற்போது தேர்வு எழுதும் அணைத்து வின்னபதரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அம்மா வின் சாதனைகளில் இதுவும் ஒன்று.
by கண்ணன்,India    18-டிச-2012 10:45:19 IST
வாழ்த்துகள் ...உங்கள் பணி சிறப்பானது ...
by ச.அருண்குமார்,India    18-டிச-2012 10:32:51 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us