புதிதாக தேர்வான 18,000 ஆசிரியர்களுக்கு 13ல் பணி நியமனம் | Kalvimalar - News

புதிதாக தேர்வான 18,000 ஆசிரியர்களுக்கு 13ல் பணி நியமனம்டிசம்பர் 05,2012,08:50 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கடந்த ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர், பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18,382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, இவர்களுக்கான பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி..டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி..டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது. பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி..டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்" என உத்தரவிடப்பட்டது.

இதனால், இறுதிப்பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது.அமைச்சர் தலைமையிலான குழு, புதிய விதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்" மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்து வந்தது.

பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18 ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும், குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு பெற்றவர்கள், பாடப்பிரிவை தேர்வு செய்து, பதிவு எண்களைபதிவு செய்தால், இறுதி தேர்வுப் பட்டியலில், இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம்.

அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அமாவாசை நாளான, 13ம் தேதி, விழா நடக்கும் எனவும், அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்" வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில், விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.

இதனிடையே, இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்; ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை; ஆனால், 8,718 பேர் மட்டுமே, இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை.

பல லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும், டி..டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்காததால், இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து

ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கும்,விரைவில் தேர்வாக முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.உங்களின் கனவுகள் நனவாகட்டும்.ரா.கார்த்திகேயன் வினாவைபோல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் வெறும் "கவர்ச்சியான" அறிவிப்புகளோடு கிடப்பில் போடப்பட்டதன் காரணம் என்ன வென்று தெரியவில்லை? சட்டசபையிலும் அமைச்சர்களோ,உறுப்பினர்களோ,முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் கேள்விகள் கூட எழுப்புவதில்லை.அனைவரும் புகழ் பாடுவதிலும்,மேசைகளை தட்டுவதிலுமே கவனமாக உள்ளார்கள்.உயர்கல்வியை யார் காக்க போகிறார்களோ? கல்லூரி மாணவர்களை இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆசிரிய பெருமக்களாவது கவனித்து கொள்ளுங்கள். நிறைந்த அன்புடன்..........................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
by டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்.,India    06-டிச-2012 08:15:34 IST
Whats the reason to avoid publishing the pg assistant list. Is there any mistake.
by கன்னியப்பன்,India    06-டிச-2012 07:43:46 IST
ஊழலற்ற முறையில் தேர்வு நடத்தி சிறப்பான தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்த தேர்வு வாரியத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி. இதற்க்கு காரணமான தமிழக முதல்வருக்கும நெஞ்சார்ந்த நன்றி. இரவு பகல் பாராமல் உழைத்த தேர்வாணைய ஊழியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
by ரா. கார்த்திகேயன் ,India    05-டிச-2012 20:30:01 IST
PG Teachers list eppothu veliyagum.
by karthi,India    05-டிச-2012 20:14:31 IST
முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் எப்போது வரும்?
by raghu,India    05-டிச-2012 15:36:25 IST
முதுகலை ஆரியர்கள் நிலை என்ன? எப்போது அவர்களை பணி தேர்வு செய்வார்கள் ?
by mathi,India    05-டிச-2012 13:30:23 IST
அமாவாசை நாளான, 13ம் தேதி, விழா .....நாடு எங்கே போகிறது ?... தினமலர் இதை நாசுக்காக குறிக்காது இருந்திரக்கலாமே ..
by கீரை.பைசுர் ரகுமான் ,India    05-டிச-2012 12:02:10 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us