கட்டண நிர்ணய குழு தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? | Kalvimalar - News

கட்டண நிர்ணய குழு தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? டிசம்பர் 05,2012,08:33 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவர், சிங்காரவேலுவின் பதவிக்காலம், நாளையுடன் முடிகிறது. இவர், பதவி ஏற்று ஒன்றரை ஆண்டு தான் ஆகிறது என்பதால், இவரே பதவியில் தொடர்வாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்வி கட்டணங்களை முறைப்படுத்தி, வரவு - செலவுக்கு தகுந்தாற் போல், நியாயமான கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், கட்டண நிர்ணய குழுவை அமைத்து, முந்தைய தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த 2009ல், முதல் தலைவராக, நீதிபதி கோவிந்தராஜன் பதவி ஏற்றார். கட்டணம் நிர்ணயம் செய்ததில், சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2010 நவம்பரில், நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார். 2011 சட்டசபை தேர்தலுக்குப் பின், .தி.மு.., அரசு பதவி ஏற்ற அடுத்த மாதத்தில், ரவிராஜ பாண்டியனும், ராஜினாமா செய்தார். .தி.மு.., அரசு, நீதிபதி சிங்காரவேலுவை, புதிய தலைவராக நியமித்தது. இவர், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் பொறுப்பேற்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, குழுவிற்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மூன்று ஆண்டுகளில், மூன்று தலைவர்கள் வந்து விட்டனர். அதன்படி, சிங்காரவேலுவின் பதவிக்காலம், நாளையுடன் முடிகிறது. , பதவி ஏற்று ஒன்றரை ஆண்டு தான் ஆகிறது.

எனவே, இவரே பதவியில் தொடர்வாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என, தெரியவில்லை. இவர் பதவி ஏற்றதில் இருந்து, பள்ளிகள் தரப்பில் இருந்து, சர்ச்சைகள் எதுவும் எழவில்லை. அதனால், இவரையே, பதவி நீட்டிப்பு செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us