ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி. | Kalvimalar - News

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.நவம்பர் 24,2012,08:59 IST

எழுத்தின் அளவு :

அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: டி..டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி..டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

TAMILNADU ENGLISH LANGUAGE TEACHERS ASSOCIATION (TELTA) starts to get english pg promotion to only english BTs
by Dr.V.S.MURUGAIAN.,India    02-ஜூன்-2013 18:28:19 IST
மிகவும் தேவையான விபரங்கள். இது போன்ற செய்திகளை பள்ளிகளில் இருந்தே அறிய seiyalaam. மேலும் எங்கள் மாநில பெயரை முந்திய பெயரான பாண்டிச்சேரி என மாற்றவும்
by ப. ரவிச்சந்திரன்,India    24-நவ-2012 12:55:23 IST
வரலாறு padithavanga
by sankar,India    24-நவ-2012 12:35:36 IST
ஆனால் ஏற்கனவே இருக்கும் காலி இடங்களை மட்டும் நிரப்பவே நிரப்ப மாட்டார்கள்.நிறைந்த அன்புடன்.................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
by டாக்டர்,எ.ஜோசப்.லண்டன் ,India    24-நவ-2012 11:59:24 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us