பள்ளி குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள்: முதல்வர் | Kalvimalar - News

பள்ளி குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள்: முதல்வர்நவம்பர் 03,2012,12:18 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளிகளில் செயல்படும் சத்துணவு திட்டத்தில், பல புதிய உணவுகளை, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வழங்குவதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: சோதனை முறையின் அடிப்படையில், புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில்,

திங்கட்கிழமை - காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டை

செவ்வாய்க்கிழமை - கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலா

புதன்கிழமை - தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை

வியாழக்கிழமை - சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை

வெள்ளிக்கிழமை - கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய்ப் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு.


மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில்,

திங்கட்கிழமை - சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா.

செவ்வாய்க்கிழமை - மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை

புதன்கிழமை - புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா

வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல்

வெள்ளிக்கிழமை - சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொறியல்.

ஆகிய அட்டவணைகளில் உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படும். புதிய திட்டத்தின்படி,

திங்கட்கிழமை - தக்காளி சாதம், வேகவைத்த முட்டை

செவ்வாய்க்கிழமை - கலவை சாதம் மற்றும் சுண்டல்

புதன்கிழமை - காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை

வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை

வெள்ளிக்கிழமை - பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு

சனி மற்றும் ஞாயிறு - கலவை சாதம்.

மேற்கூறிய புதிய உணவுவகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு வட்டாரத்தில் மட்டும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வட்டாரத்தில், இந்த புதிய உணவுமுறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின்னர், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

வெரி குட் planning for take care of children
by ப.Premkumar,India    11/4/2012 10:58:14 AM IST
சிறு வயது குழைதைகளுக்கு எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு நாம் கண்டிப்பாக பாராட்டு தெரிவிக்க வேண்டும் மட்டும் இன்றி எந்த திட்டம் வெற்றி அடைய வாழ்த்துவோம். குழைந்தை பருவத்தில் ஹெல்த்தி யான உணவு சாப்பிட்டால் பிற்காலத்தில் நல்ல ஆரோக்யமாக வாழ முடியும்
by Balasubramaniam,United Arab Emirates    11/3/2012 12:11:26 AM IST
செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றிக்கும் சிறிது ஈயப்படும் என்பது போயி,செவிக்கு தரும் கல்வி இரண்டாம் பட்ஷம் ஆகி வெரைட்டி உணவே பிரதானம் ஆகிவிட்டது. புயல் நிவாரணம்,பயிர்கள் நாசம் பற்றி சட்டசபையில் பேசியதாக தெரியவில்லை.
by cheenumeenu,India    11/2/2012 11:04:47 PM IST
பெத்த அம்மாவுக்கு இல்லாத அக்கறை நம்ம அம்மாவுக்கு இருக்கு பார்த்திர்களா. எத்தனை பெற்றோர்கள் நம் குழந்தைகளுக்கு ippadiபட்ட உணவு கொடுக்க முடியாமல் மனதிலேயே வைத்து புழுங்கியவர்களுக்கு இது ஒரு வரப்ரசாதம். எங்கும், எதிலும், எப்பவும் நம் அம்மாதான் நிற்கிறார்.
by உஷா,India    11/2/2012 8:53:25 PM IST
இன்னும் இப்படி சத்துணவு உணவை எதிர்பாக்கும் நிலைமையில் தான் மக்களின் பொருளலாதரம் உள்ளது.ஜெயா & கருணா இதற்கு பதில் சொல்ல வேண்டும் .பிரியாணி கொடுப்பது தொலைநோக்கு திட்டம் அல்ல .பின்தங்கிய மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்த என்ன வ்ழி என்று யோசிக்கவேண்டும் .பாவம் இந்த ஏமாந்து போன மக்கள் உண்மையாக மகளுக்கு உழைக்கும் தலைவன் வந்தால் தான் இதற்கு விடிவு .
by Siva,India    11/2/2012 8:44:36 PM IST
மிக சிறந்த முயற்சி..
by பாலா,India    11/2/2012 5:38:34 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us