வெளிநாட்டு பல்கலைகளில் முதுநிலைப் படிப்பா? | Kalvimalar - News

வெளிநாட்டு பல்கலைகளில் முதுநிலைப் படிப்பா?நவம்பர் 02,2012,16:57 IST

எழுத்தின் அளவு :

புகழ்பெற்ற இந்திய பல்கலைக்கழகங்களை விட, வெளிநாட்டுப் பல்கலைகளில், முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு சேர்க்கைப் பெறுவது எளிது. ஆனால், மிகச் சரியாக திட்டமிட வேண்டும். அவ்வளவே.

கால வரிசைப்படி திட்டமிடல் செயல்பாடு

அக்டோபர்

* ஜிஆர்இ மற்றும் டோபல் தேர்வுகளுக்கான தேதிகளைத் திட்டமிட வேண்டும். நீங்கள் பதிவு செய்வதற்கு 6 வாரங்கள் முன்பாக இவை இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் முன்பாக வேண்டாம். அதேசமயம், நவம்பர் இறுதிக்கும் பின்பாக வேண்டாம்.

* ஜிஆர்இ தேர்வுக்கு படிப்பதைத் தொடங்கவும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரங்கள் படித்தால் போதுமானது.

* வெளிநாட்டு பல்கலைகள், துறைகள் மற்றும் பேராசிரியர்களைப் பற்றி ஆன்லைனில் ஆய்வு செய்யவும் மற்றும் அவற்றை ஷார்ட்லிஸ்ட் செய்யவும்.

* உங்களின் நோக்க அறிக்கை(statement of purpose) தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் ஒரு மாதிரியை(sample) எழுதவும். இந்த மாத இறுதியில், ஒவ்வொன்றின் முதல் வரைவையும் முடிக்க வேண்டும்.

* ஆசிரியர் அல்லது தகுதியான வேறு சிலரை பரிந்துரை செய்யும்படி கேட்கவும். குறைந்தபட்சம் 3 பரிந்துரையாளர்கள் உங்களுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஒருவர் கட்டாயம் கல்வியாளர்களாக இருக்க வேண்டும். உங்கள் பரிந்துரையாளர்களிடம் நோக்க அறிக்கையின் முதல் வரைவை கொடுக்கவும். இதன்மூலம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

நவம்பர்

* ஜிஆர்இ தேர்வுக்கு படித்து முடித்து, ரிவிசனைத் தொடங்கவும். மாதிரித் தேர்வுகளை எழுதி அவற்றுக்கான மதிப்பெண்களை சரியான முறையில் வழங்கவும்.

* ஜிஆர்இ தேர்வில் வரும் பகுப்பாய்வு கட்டுரைகளை எழுதிப் பழகவும் மற்றும் அவற்றுக்கான நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளவும்.

* உங்களது ஆராய்ச்சியின் அடிப்படையில், உங்களுக்கான பல்கலையை இறுதி செய்யவும். இறுதி செய்வதற்கான கடைசித் தேதி டிசம்பரில் இருந்தால், உங்களின் முடிவை துறை பேராசிரியர்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

* திரும்ப படித்தல், மறுபடியும் படித்தல், உங்களின் நோக்க அறிக்கையை சரிசெய்தல் மற்றும் சாம்பிள்களை எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும்.

* நவம்பர் மாத ஆரம்ப நாட்களில், நீங்கள் இளநிலை மற்றும் முதுநிலை படித்த கல்வி நிலையங்களில் இருந்து, தேவையான ஆவணங்களை(transcripts) சேகரிக்கவும்.

* பேப்பர் வடிவத்தில் பரிந்துரை கடிதங்களை அனுப்ப விரும்பினால், சீல் வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதங்களைப் பெறவும்.

* ஜிஆர்இ மற்றும் டோபல் தேர்வுகளை எழுதவும். சிறப்பாக எழுதவும், எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம்.

டிசம்பர் மற்றும் ஜனவரி

* உங்களின் நோக்க அறிக்கையை இறுதி செய்யவும் மற்றும் சாம்பிள் எழுதவும்.

* Original list of four -ல் இடம்பெறாத பல்கலைகளுக்கு, ஜிஆர்இ மற்றும் டோபல் மதிப்பெண்களை அனுப்பவும்.

* உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கி நிறைவு செய்க அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.

* உங்கள் விண்ணப்பத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அவற்றை சரியான நேரத்தில் மின்னஞ்சல் செய்யவும்.

* உங்களின் பரிந்துரையாளர்கள், மின்னஞ்சல் மூலமான இணைப்பை பெறுவது கட்டாயம். அப்போதுதான், அவர்கள் தங்களின் கடிதங்களை மின்னஞ்சல் செய்ய முடியும். பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஆன்லைனில் நிறைவு செய்கையில், மேற்கண்ட விஷயம் செய்யப்பட வேண்டும்.

* உங்களின் விண்ணப்பம் முறையாக நிரப்பப்பட்டுள்ளதா மற்றும் சம்பந்தப்பட்ட துறையால் முழுமையாக பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி

* உங்களின் மின்னஞ்சல்களை அடிக்கடி பார்க்கவும். இதனால், கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் தகவல் தொடர்புகளை உடனடியாக தவறாது பெறலாம். மேலும், நேர்முகத் தேர்வுக்கு உங்களுக்கு வரும் அழைப்பையும் நீங்கள் உடனே அறிந்துகொள்ள முடியும்(சில பல்கலைகள் மட்டுமே நேர்முகத்தேர்வை நடத்துகின்றன).

* நீங்கள் சேர விரும்பும் கல்வி நிலையத்தை தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து ஆவணங்களும் பெறப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்யவும். சில நேரங்களில், கல்லூரி வாரியத்திலிருந்து மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம் மற்றும் சில நேரங்களில், கொரியர் சேவையாளர்கள், விண்ணப்பங்களை கையாளும் நபரிடம், உங்கள் ஆவணங்களை சேர்க்காமல் இருக்கலாம். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள், சரியான தொடர்புகளின் மூலம், அனைத்தையும் உறுதி செய்வது உங்களின் பொறுப்பு.

* நிதியுதவி உங்களுக்கு வேண்டுமென விரும்பினால், அதுதொடர்பான ஆவணங்களை அனுப்பியுள்ளீர்களா என்பதையும் உறுதி செய்யவும்.

மார்ச் மற்றும் ஏப்ரல்

* Founder&'s day award உள்ளிட்ட முக்கிய விருதுகளை உங்களின் கல்லூரி வாழ்க்கையில் நீங்கள் பெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனத்திற்கு அதை தெரிவிக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனம், உங்களுக்கென ஒரு தனி கோப்பை பராமரிக்கும். உங்களைப் பற்றிய தகவல்கள் அவற்றில் சேகரிக்கப்படும்.

* சேர்க்கைத் தொடர்பான முடிவுகள் மற்றும் நிதி உதவி தொடர்பான கடிதங்கள், பெரும்பாலும் இந்த மாதங்களில்தான் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் பெறும் ஒவ்வொன்றையும் கவனமாக படியுங்கள். ஏனெனில், சில நேரங்களில், உங்கள் பக்கமிருந்து நீங்கள் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

* இறுதியான முடிவை எடுத்து, சேர்க்கை விண்ணப்பத்தை மின்னஞ்சல் செய்து, நீங்கள் சேர விரும்பும் கல்வி நிலையத்திற்கு, காசோலையை டெபாசிட் செய்யவும். மே மாதம் பிறப்பதற்குள் இவற்றை செய்துவிடவும்.

* உங்களை அழைத்த, அதேசமயம் நீங்கள் சேர விரும்பாத கல்வி நிலையங்களுக்கு, அதை எழுத்து மூலமாக தெரிவித்து விடவும். ஏனெனில், அந்த இடம் இன்னொரு மாணவருக்கு கிடைக்கலாம்.

மே

* தங்குமிடம் பற்றி இறுதி செய்யவும்

* மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் வேலையைத் தொடங்கவும். ஒரு வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்துவிட்டால் மட்டுமே, மாணவர் விசாவை நீங்கள் பெற்று விடலாம் என்பது அர்த்தமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகள், அனைத்து மாணவர் விசாக்களையும், திறன்வாய்ந்த குடியேறுபவர் என்ற நிலையிலேயே பரிசீலிக்கின்றன. எனவே, நேர்முத் தேர்வின்போது, உங்களின் நிலையை நிரூபிக்க வேண்டும்.

* விசா செயல்முறை முடிந்ததும், ஏறக்குறைய அனைத்தும் முடிந்தது. புறப்படும் முன்பாக, மருத்துவ பரிசோதனை செயல்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டும். உங்களின் paper work -ஐ வரிசைப்படி பெறவும். இறுதித் தேர்வு ஆவணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பவும். Orientation -க்காக கையெழுத்திடவும். அவ்வளவுதான், நீங்கள் புறப்படலாம், வாழ்த்துக்கள்!

நீங்கள் கையோடு வைத்திருக்க வேண்டியவை

* பாஸ்போர்ட்
* அசல் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றுகள்
* மருத்துவ பரிசோதனை அறிக்கைகள்
* சேர்க்கைக்கான பல்கலைச் சான்று மற்றும் பல்கலை அனுப்பிய முக்கிய ஆவணங்கள்
* சர்வதேச மாணவர் அட்டை மற்றும் S-pass போன்ற அடையாள சான்றுகள்
* செல்லும் நாட்டிலிருக்கும் நண்பர் அல்லது உறவினர்களின் தொடர்பு விபரங்கள்.

வைத்திருக்க வேண்டிய இதர முக்கிய அம்சங்கள்

* காலநிலைக்கேற்ற உடைகள்
* படுக்கை மற்றும் இயற்கை உபாதை உபகரணங்கள்
* முதலுதவி பொருட்கள்
* 100 டாலர்கள் அளவிற்கு உள்ளூர் பணம்
* அடிப்படையான சமையல் பாத்திரங்கள்
* கேமரா
* உங்களுக்கு இருக்கும் மருத்துவ பிரச்சினைகளைப் பற்றிய ஆவணங்கள்.


வாசகர் கருத்து

எனக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வெளிநாட்டு பல்கலை கழகம் பட்டியல் வேண்டும். நன்றி..
by சந்திரமோகன்,India    11/2/2012 12:00:29 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us