கிரெடிட் அனலிஸ்ட் ஆக வேண்டுமா? | Kalvimalar - News

கிரெடிட் அனலிஸ்ட் ஆக வேண்டுமா?அக்டோபர் 21,2012,13:52 IST

எழுத்தின் அளவு :

சிறிய மற்றும் பெரிய நிதி நிறுவனங்களில் கிரெடிட் அனலிஸ்ட் தேவை அதிகம் இருக்கிறது. வங்கிகள், மியூச்சுவல் பண்ட், முதலீடு, ஈக்விட்டி நிறுவனங்களில் கிரெடிட் அனலிஸ்ட்டுகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

வாடிக்கையாளரின் நிதி பின்னணி, வருவாய் மற்றும் முதலீடுகள்
போன்றவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்து, நிதியை திருப்பிக் கொடுக்கக்கூடிய திறன் வாடிக்கையாளர்களுக்கு இருப்பதை உறுதி செய்து, பணம் அளிக்கலாம் என ஒப்புதல் வழங்கும் பணி, இத்துறை நிபுணர்களை சார்ந்தது.

தகுதிகள்

கணித அறிவு, நெருக்கடியான சூழ்நிலையில் திறமையாக பணியாற்றுதல், புத்திக் கூர்மை, ஆங்கில புலமை ஆகியவை அவசியம். பி.காம்., பி.டெக்., சி.ஏ., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளை படித்தவர்கள், கிரெடிட் அனலிஸ்டாக பணியாற்ற முடியும். சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்களே பெரும்பாலான நிறுவனங்களின் தேர்வாகின்றனர்.

கிரெடிட் அனலிஸ்ட்டுகளுக்கு 5 லட்சம் முதல் 6 லட்ச ரூபாய் வரை ஆண்டு ஊதியமாக வழங்க நிறுவனங்கள் தயாராக உள்ளன. இது அவர்களுடைய பணித் திறமையை பொறுத்து அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்கள் டிகிரி, டிப்ளமோ, எம்.பி.ஏ., படிப்புகளில் கிரெடிட் அனலிஸ்ட் தொடர்பான பாடங்களை கற்பிக்கின்றன.

* ஐ.ஐ.எம்., புதுடில்லி
* டில்லி பல்கலைக்கழகம்
* பெரும்பாலான ஐ.ஐ.எம்., கள் மற்றும் முன்னணி
பி-ஸ்கூல்கள்
* இன்ஸ்டிடியூட் ஆப் சார்டர்டு அக்கவுன்டன்ட்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us