தொடர் மின் தடை: பள்ளிச் சீருடை தைக்கும் பணி சுணக்கம் | Kalvimalar - News

தொடர் மின் தடை: பள்ளிச் சீருடை தைக்கும் பணி சுணக்கம்அக்டோபர் 09,2012,08:15 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது; குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு வினியோகிக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மாவட்டம்தோறும் சீருடை தைப்பதற்காக, கூட்டுறவு சங்கங்களும், தாலுகா அளவில் அதன் கிளைகளும் உள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பெண்கள், சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, அரசு பள்ளி சீருடைகளை தைத்து கொடுக்கின்றனர். ஒரு சீருடை தைக்க, 17 ரூபாய் வழங்கப் படுகிறது.

நடப்பாண்டில், ஆண்டுக்கு நான்கு, "செட்&' சீருடை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 24 ஆயிரம் பேர், கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள நிலையில், நடப்பாண்டில், 500 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு உறுப்பினர், மூன்று நாட்களில், 100 செட் சீருடை தைக்க காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை விரைந்து முடிக்க, தையல் இயந்திரத்தில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தவிர, பிற மாவட்டங்களில், தினமும், 14 முதல், 16 மணி நேரம் வரை நிலவும், தொடர் மின் வெட்டால், அதிகாரிகள் வழங்கும் கெடுவுக்குள், சீருடை தைக்க முடிவதில்லை. இதனால், பாதி கல்வியாண்டு நிறைவடையும் தருவாயிலும் கூட, பல பள்ளிகளில், முதல் செட் சீருடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் கூறுகையில், மின்வெட்டு பிரச்னையால், 100 சீருடை தைக்க, ஒரு வாரமாகிறது. அதிகாரிகளின் கெடுபிடியால் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் திணறுகிறோம்&' என்றனர்.

கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: உறுப்பினர்கள் குறித்த நேரத்தில், சீருடை தைத்து வழங்காததால், பள்ளிகளுக்கு வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. முதல் செட் சீருடை, அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் செட் சீருடை வழங்குவதில், 50 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மின்வெட்டு பிரச்னை குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us