பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்செப்டம்பர் 21,2012,17:28 IST

எழுத்தின் அளவு :

விருதுநகர்: பிளஸ் 2 தனித்தேர்வு எழுதத் தவறியவர்கள், தத்கால் திட்டத்தில், இன்றும், நாளையும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில், வழங்கப்பட்டுள்ள அறிவுரைப்படி, நாளை மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்-லைனில், பதிவிறக்கம் செய்யப்பட்ட, "சலான்&' மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை - 6&' என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பாடம் மட்டும் எழுதுவோர், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய், இதர கட்டணம், 35 ரூபாய்; அனைத்துப் பாடங்களையும் எழுதுவோர், 187 ரூபாய், மற்றும், "தத்கால்&' திட்டத்திற்கு, 1,000 ரூபாயை, செப்டம்பர் 24ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன், செப்டம்பர் 28, 29ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, "ஹால் டிக்கெட்&' பெற்றுக் கொள்ளலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us