சென்னை: குரூப் - 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தை தொடர்ந்து, ஆன்-லைன் வழித் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான, ஒப்பந்தத்தை, டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டது.
அந்த டெண்டர் விண்ணப்பத்தில், தேர்வாணையம் குறிப்பிட்டிருப்பதாவது: சி.பி.டி., (கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட்) முறையில், ஆன்-லைன் வழியாக தேர்வை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு, தேர்வாணையம் செல்கிறது.
தேர்வாணையத்தில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப பயன்பாடு என்பது மிகவும் குறைவு. பல முக்கியமான பணிகள், ஒவ்வொரு கட்டத்திலும், மனித சக்தியை கொண்டே நிறைவேற்றப்படுகிறது. அனைத்துப் பணிகளும், கணினிமயமாக்கப்படவில்லை. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில், தேவையில்லாமல் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஆன்-லைன் வழியிலான தேர்வு முறையில், உயர்ந்த தரத்தில் தேர்வை நடத்துவதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். ஆன்-லைன் வழியிலான தேர்வு, தேர்வர் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு கட்டமாகவோ, பல கட்டங்களாகவோ நடக்கும்.
சி.பி.டி., முறையில் தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளில் கூறப்பட்ட அம்சங்கள்: திட்டத்தை உருவாக்குதல், அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, மென்பொருள் (சாப்ட்வேர்), வன்பொருள் (ஹார்டுவேர்) தொழில்நுட்பங்களை அளிப்பது, தேர்வு நடைமுறைகளை மேலாண்மை செய்வது. தகுதி வாய்ந்த நிறுவனம், "டெண்டர்&' படிவத்தை பூர்த்தி செய்து, 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
வணக்கம் தினமலர். குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தெரியுமா உங்களை போன்ற ஊடகங்கள் மூலமாக அறிய விரும்பிக்றோம்
|
by Jagan,India 9/15/2012 12:29:53 PM IST |