ஆன்லைனில் ஆசிரியர்கள் நியமன கவுன்சிலிங் | Kalvimalar - News

ஆன்லைனில் ஆசிரியர்கள் நியமன கவுன்சிலிங்செப்டம்பர் 14,2012,08:47 IST

எழுத்தின் அளவு :

சிவகங்கை: முதன்முறையாக ஆன்லைன் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை (15ம் தேதி) நடக்கிறது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது.
 
இவர்களுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் "ஆன்லைனில்&' நடத்த, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தகவல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்துள்ளது.

சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், நியமன கவுன்சிலிங் சென்னையில் நடத்துவது வழக்கம். பெண்கள் சென்னைக்கு சென்று, வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, முதன் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (செப்.,15) அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஆன்லைனில் அனுப்பும் காலியிடங்கள், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும். இதை பார்த்து, பிடித்த இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம். உடனே உத்தரவு வழங்கப்படும். இதற்கான தகவல் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


வாசகர் கருத்து

வெரி வெரி சூப்பர் .trb மூலம் செலக்ட் ஆனவர்கும் இதேபோல்தான். எப்பொழுது என்றைக்கு ப்ளீஸ் தகவல்
by நடராஜன்,ர ,India    14-செப்-2012 23:11:10 IST
இதை மரியாப்பனே செய்ய இருந்தார். திருவாளர் தேவராஜனுக்கு வெகுவான பாராட்டுக்கள் இதேபோல் பள்ளிக்கல்வியில் உள்ள எழுத்தர்களும் புத்திசாலிகளாக இருந்தால் நல்லது
by sundaram,India    14-செப்-2012 10:17:08 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us