நல்லாசிரியர் விருதுகளை குவிக்கும் மேலூர் கல்வி மாவட்டம் | Kalvimalar - News

நல்லாசிரியர் விருதுகளை குவிக்கும் மேலூர் கல்வி மாவட்டம்செப்டம்பர் 10,2012,10:38 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரையில், மேலூர் கல்வி மாவட்டத்தில், கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், 7 ஆண்டுகளாக தொடர்ந்து நல்லாசிரியர் விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

சிறந்த சேவை மற்றும் கல்வி பணிக்காக, ஆண்டுதோறும் "நல்லாசிரியர்&' விருது வழங்கப்படுகிறது. இதை 7 ஆண்டுகளாக கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

இந்தாண்டு, நரசிங்கம் சி.எஸ்.ஐ., தொடக்க பள்ளி தலைமையாசிரியர் ஜான்குணசேகர பாண்டியன் பெற்றார். 2010௧1ல், ரங்கநாயகி (சிட்டம்பட்டி நடுநிலை பள்ளி), சாந்திக்கு (அப்பர் தொடக்க பள்ளி) கிடைத்தது. 2009௨010ல், சந்திரன் (ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, கபீர்நகர்), முத்துலட்சுமி (ஆர்.சி.நடுநிலைப்பள்ளி), செல்வராஜ்(தேசிய நல்லாசிரியர் விருது) பெற்றனர்.

கடந்த 2008- 2009ல், தாமரைச்செல்வி (ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, குன்னத்தூர்) பெற்றார். 2007- 2008ல், ஜெயபால் (கபீர் நகர் பள்ளி), 2006- 2007ல், ஜெயபிரகாஷ் நாராயணன் (வடக்கு சக்குடி பள்ளி), ராமு (உலகனேரி பள்ளி), சுப்பிரமணியன் (மாநகராட்சி பள்ளி, சாத்தமங்கலம்) பெற்றனர்.

கடந்த 2005- 2006ல், பாண்டி (ஒத்தக்கடை, தலைமையாசிரியர்) என, கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து "நல்லாசிரியர்&' விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us