பொதுஅறிவை வளர்க்க வேண்டிய பணத்தை முறைகேடு செய்யும் பள்ளிகள் | Kalvimalar - News

பொதுஅறிவை வளர்க்க வேண்டிய பணத்தை முறைகேடு செய்யும் பள்ளிகள்செப்டம்பர் 09,2012,11:29 IST

எழுத்தின் அளவு :

கம்பம்: பள்ளிகளில், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க, வழங்கும் 10 ஆயிரம் ரூபாயை, பெரும்பாலான பள்ளிகள், முறைகேடு செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர், பொது அறிவு, அன்றாட நிகழ்வுகள், அரசியல், கல்வி, நிர்வாகம் குறித்து தெரிந்து கொள்ள, தினமும் நாளிதழ்கள் படிப்பது அவசியம். இதற்காக, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில், ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

முன்னணி நாளிதழ்களை வாங்கி, மாணவ, மாணவியரை படிக்க வைக்க வேண்டும் என்பது உத்தரவு. ஒரு சில பள்ளிகள் மட்டுமே, இதை கடைபிடிக்கின்றன. பல பள்ளிகளில், ஏதாவது ஒரு நாளிதழை மட்டும் வாங்குவதும்; சில பள்ளிகளில், தலைமையாசிரியர் வீடு, அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கும் நாளிதழ்கள் செல்கின்றன.

பெரும்பாலான பள்ளிகளில், நாளிதழ்கள் வாங்காமல், அரசு பணத்தை, முறைகேடு செய்வதும் நடக்கிறது. முதன்மைக் கல்வி அலுவலர், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us