ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | Kalvimalar - News

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புசெப்டம்பர் 01,2012,08:07 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 7, 8ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.

இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும் ( www.trb.tn.nic.in) அழைப்புக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த இணையதளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

Above Mention one is correct, So TET Also take awareness to conduct Exam & Preparetaion of Question Papers. Above mention candidate are need to do Enquirey BY TRB..
by Ashok,India    9/2/2012 10:24:34 PM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வு எழுதியவர்களில் சிலர் மட்டும் முதல் தாளில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்தும் இரண்டாம் தாளில் 100ஐ தாண்டி மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து தகுதி தேர்வு மீதும் பட்டதாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை காட்டி பட்டதாரிகள் குமுறுகின்றனர். தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர். அந்ததேர்வில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2,88,588 பேர் முதல்தாளும்( 1 முதல் 5ம் வகுப்புக்கு உரியது), பட்டம் முடித்து பி.எட் படித்தவர்கள் 3,88,175 பேர் இரண்டாம் தாளும் (6 முதல் 8ம் வகுப்புக்கு உரியது) எழுதினர். இவற்றில் சிலர் இரண்டு தாள்களும் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதில் முதல் தாளில் 1735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், தாள் 1 மற்றும் தாள்&2 ஆகிய இரண்டிலும் 83 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளிலும் தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை பார்க்கும் போது, தகுதி தேர்விலும் ஏதோ நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தாள்-2ல், 113 பெற்றுள்ளார். அதேபோல தாள்-1ல் வெறும் 16 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவர் தாள்-2ல் 114 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தகுதி தேர்வை பொறுத்தவரை தாள் ஒன்று என்பது தொடக்க பள்ளி பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறுவது. தாள் இரண்டு என்பது பட்டதாரிகளுக்கு உரியது. அதில் 6ம் வகுப்பு முதல் 10ம வகுப்புவரை உள்ள பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும். முதல்தாளை விட இரண்டாம் தாள் தான் கடினமானது. காலையில் முதல்தாள் தேர்வு எழுதிய ஒருவர், அந்த தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்ணும், அதே நாளில் மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மாநில அளவில் முதல் 15 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்று வந்துள்ளார். இது போல் பலர் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர். இது 6 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்வு எழுதி ஏமாற்றம் அடைந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
by TNBTEN,India    9/2/2012 1:18:27 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us