பி.எச்டி. படிப்புக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி வரை அவகாசம் | Kalvimalar - News

பி.எச்டி. படிப்புக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி வரை அவகாசம்ஆகஸ்ட் 28,2012,09:17 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலையில், பி.எச்டி., படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கோவை, அண்ணா தொழில்நுட்பப் பல்கலையில், பகுதிநேர பொறியியல் முதுகலைப் படிப்பை முடித்த மாணவர்களும், திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலையில், எம்.பி.சி.பி.எஸ்., (மாடுலர் பேஸ்டு கிரெடிட் பேங்கிங் சிஸ்டம்) படிப்பில், மூன்று ஆண்டு பகுதிநேரப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர்களும், சென்னை, அண்ணா பல்கலையில் பி.எச்டி., சேர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

எம்.இ., - எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை, பகுதிநேர அடிப்படையில் முடித்த மாணவர், பி.எச்டி.,யில் சேர விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைகள் இணைப்பிற்குப் பின், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, இம்முடிவை, பல்கலை எடுத்துள்ளது. பி.எச்டி., விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து

STUDIED IN DEEMED UNIVERSITY ME,IN PARTTIME CLASSES.WHETHER IT IS ELEGIBLE FOR STUDY Phd IN ANNAUNIVERSITY AT CHENNAI.
by kashirajan,India    8/29/2012 7:24:43 AM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us