காஞ்சிபுரம்: ஜேப்பியார் கல்லூரி அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய பரிந்துரை கடிதம் பரிசீலனையில் உள்ளது எனத் தமிழக உயர்கல்வித் துறை கூடுதல் முதன்மை செயலர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில், கவுன்சிலிங் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டன. இவ்வருடம், இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரு லட்சத்து 27 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் வரவேற்பு உள்ளது. அரக்கோணத்தில் புதிதாக துவக்கப்பட்ட கல்லூரியில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. புதிதாக தேர்வு செய்யப்படும் விரிவுரையாளர்களுக்கு, எவ்வாறு பாடம் நடத்துவது என, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், கல்லூரி முதல்வர்களாக வருவோருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 15 சதவீதமாக உள்ளது; தமிழகத்தில் 18 சதவீதமாக உள்ளது. அதை 25 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரி அங்கீகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய பரிந்துரை கடிதம், பரிசீலனையில் உள்ளது.
பொதுவாக ஒரு கல்லூரியில், போதிய வகுப்பறைகள் உள்ளதா? ஆய்வக வசதி உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதா? தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என்பதை மட்டும் உயர்கல்வித் துறை கண்காணிக்கும். கட்டடங்கள் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா? என்பதை உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் தான் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதுகலை பட்ட மேற்படிப்பு சிறப்பு மையங்கள்: உயர்தர தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்துடன் கூடிய, முதுகலை பட்ட மேற்படிப்பு சிறப்பு மையங்கள் துவக்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக 10 பல்கலைக்கழகங்களில், எட்டு பாடங்களுக்கான சிறப்பு மையங்கள் துவக்கப்பட உள்ளன.
அடேங்கப்பா 1,27,000 இடங்கள்... குறைந்த பட்சம் 4 ஆண்டுகளுக்கு 4,00,000 ரூபாய்கள் கட்டணம் கட்டணும்.. மொத்த வருவாய் ரூ. 5,080 கோடிகள்.. ஒவ்வொரு வருடமும் ...புது வருகை..மனிதனின் ரத்தத்தை உறிஞ்சும் கல்வி வியாபாரிகள்...
|
by மதுரை விருமாண்டி,India 8/26/2012 11:10:50 PM IST |