தேனி: மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை வைத்து, காலேஜ் பஜார் கண்காட்சி மாவட்டந்தோறும் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களும் இடம் பெற வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும், என மகளிர் திட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் "காலேஜ் பஜார்&' என்ற 2 நாள் கண்காட்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.