ஆசிய உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் சிக்கலான அம்சங்களைப் பற்றி விவாதிக்க, துணைவேந்தர்கள், சிஇஓ -க்கள், இயக்குநர்கள், டீன்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோரை ஒன்றிணைக்கும் Higher Education Summit Asia 2012, சிங்கப்பூரிலுள்ள Grand Copthorne Waterfront என்ற ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
Annual Higher Education Leadership Asia Pacific என்ற பெயரில் நடைபெறும் இம்மாநாடு, 4வது வருடமாக நடத்தப்படுகிறது.
இம்மாநாடு நடைபெறும் தேதி - 11 - 14 செப்டம்பர், 2012.
இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும் விஷயங்கள்
நிதியளிப்பு மற்றும் ஆதாரவளம், ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுமுயற்சி, உலகளாவிய உயர்கல்வியில் ஆசியாவின் எழுச்சி மற்றும் தரநிலைகள் உள்ளிட்டவை.
மேலும், உலகளாவிய சந்தையில், ஆசியாவின் தரநிலையை உயர்த்தும்பொருட்டு, உயர்கல்வித் துறை நிபுணர்கள், நடைமுறை வியூகங்களுடன், சமீபத்திய கொள்கை முடிவுகளைப் பற்றி நன்கு அறிந்திருத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
8 முக்கிய காரணங்களுக்காக இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை ஒருவர் உறுதி செய்யலாம்
* உயர்கல்வி தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான முறையில் விவாதிக்க, ஆசியாவில் நடக்கும் ஒரே நிகழ்வு இதுவாகும்.
* சமீபத்திய சீர்திருத்தங்களை அறிதல்.
* தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி, அதன்மூலம் உங்களின் தயாரிப்பை செம்மைப்படுத்தி, அவற்றை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லுதல்.
* ஆராய்ச்சிக்கான கூட்டிணைவில், சமீபத்திய நிகழ்வுகளையும், இவை எந்த வகையில் உங்களது கல்வி நிலையத்தின் தரத்தை உயர்த்துகிறது என்பதையும் கண்டறிதல்.
* 2 மைக்ரோ மாநாடுகளில் கலந்துகொண்டு, சந்தைப்படுத்தல் மற்றும் சிறப்பான நிதி சேகரிப்பு ஆகியவை தொடர்பான நடைமுறை திறன்களை பெறுதல்.
* வட்டமேசை கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு, உங்களின் கேள்விகளுக்கான பதில்களைப் பெறுதல்.
* உயர்கல்வி முதலீட்டு வாய்ப்புகளுக்காக, புதிய சந்தைகளை அணுகுவதைப் பற்றி அறிதல்.
* சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தி, சர்வதேச மாணவர்களைப் பணியமர்த்துதல் தொடர்பான நடைமுறை திறன்களைப் பெறுதல்.
விவாதிக்கப்படவுள்ள முக்கியத் தலைப்புகள்
* உயர்கல்வியை உலகமயமாக்குதல்
* பாடத்திட்ட சீர்திருத்தம்
* தர மற்றும் நற்பெயர் மேலாண்மை
* கல்வி நன்கொடை மற்றும் அறக்கொடை மேலாண்மை
* தேசங்கள் கடந்த கல்விக்கான வியூகமுள்ள கல்வி மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு
* சந்தைப்படுத்தல் மற்றும் தர மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தல்
* ஆராய்ச்சி மேலாண்மை மற்றும் கூட்டிணைவுகள்
* ஆசிய உயர்கல்விக்கான செயல்திட்டங்களை நிர்வகித்தல்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
* உயர்கல்வி நிறுவனங்கள்
* தனியார் கல்வி நிறுவனங்கள்
* அரசு
* உயர்கல்விக்கான சர்வதேச அமைப்புகள்
* PE இன்வெஸ்டர்
* கல்வி சேவைகள் வழங்குநர்கள்
* கல்வித்துறை ஆலோசனை அமைப்புகள்
* கல்வி தொழில்நுட்ப வழங்குநர்கள்.
இம்மாநாட்டில், கடந்த காலங்களில் கலந்துகொண்ட நாடுகள்
சிங்கப்பூர்
மலேசியா
ஹாங்காங்
மத்திய கிழக்கு நாடுகள்
அமெரிக்கா
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
ஜப்பான்
கொரியா
ஐரோப்பிய நாடுகள்
இந்த மாநாட்டைப் பற்றி பல்வேறு தகவல்களை விரிவாக அறிய, www.highereducationsummit.com என்ற வலைத்தளம் செல்க அல்லது +65 6508 2401 என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்புகொள்க.