மருத்துவம் சார் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு | Kalvimalar - News

மருத்துவம் சார் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வுஆகஸ்ட் 19,2012,10:16 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவம் சார் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 21ம் தேதி துவங்குகிறது.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த 10ம் தேதி முடிந்தது. அதன் முடிவில், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், பி.எஸ்சி., நர்சிங் - 4041; பி.பார்ம் - 957; பி.பி.டி., - 619 இடங்கள் காலியாக உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு, வரும் 21ம் தேதி முதல் செப்., 12 வரை நடக்கிறது. "இதில் பங்கேற்கத் தகுதியானவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், தங்கள் தரவரிசை, அழைப்புக் கடிதம் உள்ளிட்ட விவரங்களை, http://www.tnhealth.org/ என்ற இணையதளத்தில் பெறலாம்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us