சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 398 மாணவர்கள் தேர்வு | Kalvimalar - News

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 398 மாணவர்கள் தேர்வுஆகஸ்ட் 16,2012,10:46 IST

எழுத்தின் அளவு :

சேலம்: மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 398 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவியர்களை தேர்வு செய்வதற்கான போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கியது.

சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வீரர்கள் தேர்வு நடந்தது. வீரர்கள் தேர்வு முடிந்தது. சேலம் மாவட்டத்தில் 9 மையங்களில் போட்டிகள் நடந்தது.

கால்பந்து போட்டியில், 66 பேர், ஆக்கியில் 58, வாலிபாலில் 36, கூடைபந்தில் 30, கைப்பந்தில் 42, வாலிபாலில் 36, பூப்பந்தில் 10, இறகுப் பந்தில் 30, செஸ் போட்டியில் 90 பேர் என மொத்தம் 398 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us