பி.எல்., ஹானர்ஸ் படிப்புக்கு கலந்தாய்வு | Kalvimalar - News

பி.எல்., ஹானர்ஸ் படிப்புக்கு கலந்தாய்வுஆகஸ்ட் 14,2012,08:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மூன்றாண்டு பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கான கலந்தாய்வு, இன்று நடைபெற உள்ளது. சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வரும் 22ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சட்ட பல்கலையில் வழங்கப்படும், மூன்றாண்டு பி.எல்., (ஹானரஸ்) பட்டப் படிப்பிற்கு, 60 இடங்கள் உள்ளன. இதில், ஐந்து இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 55 இடங்களுக்கு, 160 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தர வரிசை பட்டியல் அடிப்படையில், 55 மாணவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. கலந்தாய்வு நடைபெறும் அன்றே, மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட உள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us