மதுரை: நாகர்கோவில் இளைஞர்களுக்கு, இலவச தொழில் முனைவு மேம்பாடு மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகத்தின் சார்பில், நாகர்கோவிலில் உள்ள, 120 இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இலவச தொழில் முனைவு மேம்பாடு மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில், பேஷன் டிசைனிங், கம்ப்யூட்டர் அக்கவுண்டிங், டேலி, டி.டி.பி., உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், நாகர்கோவில் கிளையின் சார்பில், அஷ்பாக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது மாடி, அண்ணா பேருந்து நிலையம் எதிரில், நாகர்கோவில் என்ற முகவரியில் இப்பயிற்சி நடைபெறும்.
ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கும் இப்பயிற்சி, நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை அளிக்கப்படுகிறது. 21 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 10ம் வகுப்பு. இந்த பயிற்சி முடிவில், மத்திய அமைச்சக சான்றிதழ் வழங்கப்படும்.
பங்கு பெற விரும்புபவர்கள், 93450-41515 என்ற எண்ணில் திட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க, இம்மாதம் 15ம் தேதி கடைசி நாள் என, மதுரையிலுள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.