சென்னை: சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான, மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. கல்வி மலர் இணையதளத்தில் மாணவ, மாணவிகள் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பி.ஏ., பி.காம்., (சி.எஸ்.,) பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.காம்., பி.எஸ்சி., (ஐ.எஸ்.எம்.,), பி.எஸ்சி., (வி.சி.,) உள்ளிட்ட இளங்கலை படிப்புகளுக்கான, இந்தாண்டு, ஏப்ரலில் நடந்த, இறுதி பருவ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் நாளை (9ம் தேதி) வெளியிடப்படுகிறது.
மறுமதிப்பீடு முடிவுகளை, www.unom.ac.in, www.results.southindia.com, www.results.webdunia.com, www.schools9.com, www.kalvimalar.com/results.asp, www.indiaresults.com, www.examresults.net உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். அலைபேசி மூலம், Result space> UNOMUG space> REGNO to 56263 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.