சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்கு பாயுமா? | Kalvimalar - News

சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்கு பாயுமா?ஆகஸ்ட் 05,2012,08:12 IST

எழுத்தின் அளவு :

நாமக்கல்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயுமா என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், 62 பேர், அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், 11 பேர் என, மொத்தம், 73 பேர் நேற்று முன்தினம், "சஸ்பெண்ட்&' செய்யப்பட்டனர். ஏற்கனவே நான்கு பேர், "சஸ்பெண்ட்&' செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்வித் துறையில் ஒரே நேரத்தில், 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பணத்தை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயுமா&' என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியதாவது: இந்த மோசடி சம்பவம் முழுக்க முழுக்க எங்கள் கவனத்துக்கு வராமல் அரங்கேறி உள்ளது. அதில் பள்ளித் தலைமையாசிரியர்கள், புரோக்கர்கள், ஆதி திராவிடர் நலத்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். எங்கள் நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதி திராவிடர் நலத்துறை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 17பி சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காது. அதற்கு மாற்றாக அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

அரசு உதவி பெறும் பள்ளியை அரசு எடுத்து நடத்த வேண்டும் தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
by ர.முத்துச்வாமி ,India    8/6/2012 9:50:31 AM IST
5-8-12 நாள் தினமலர் நாளிதழில் நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வித்துறையில் ஆதிதிராவிட நலத்திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை முறைகேட்டில் உதவி தொடக்க கல்வித்துறை இதனை கண்டுகொள்ளாமல் இருந்ததிருக்கும் துறை அலுவலர்கள் என்னதான் ஆதிதிராவிட நலத்துறையிலிருந்து கிளைம் செய்தாலும் அதனை முறைகேடாக பயன்படுத்தியது கல்வித்துறை பொறுப்பிலுள்ள ஆசிரியர்கள் தானே,இப்படி இருந்தும் இந்த சுதப்பாலான பதில்கள் அளிப்பதற்கும் இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று உதவி தொடக்க கல்வி அலுவலராக தற்போது பணிபுரிவோர் யாவரும் தொடக்க பள்ளியின் தலைமையாசிரியர்களாக இருந்து வந்தவர்களே, தங்கள் இனத்தினரை காட்டிக் கொடுக்க மனமற்றது மற்றொன்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் கூட்டணி அமைப்பு பலம் வாய்ந்ததாக கருதுவது , எனவே யூனியனுக்கு அஞ்சுவது, எனவே தொடக்ககல்வித்துறையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதனை கண்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, இதற்கு உதராணத்தை நான் இங்கு விளக்கிறேன் நான் ஒரு பள்ளியில் செயலராக இருந்தபோது அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் செயலரின் போர்சரி கையொப்பமிட்டு இரண்டு ஊதிய உயர்வுகள் எந்தவித உ,தொ,க, அலுவலரின் உத்தரவு இல்லாமல் சுமார் ஒன்றறை வருடங்களாக பெற்றுவந்தததை தொடக்க கல்வித்துறைக்கு தகவல்பெறும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க சுமார் ஒருஆண்டுகாலம் முதல் அமைச்சர் தனிபிரிவு , மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வரை வழக்கு தொடர்ந்த பின்தான் தவறாக பெற்ற ஊதியங்கள் நிறுத்தப் பட்டன, ஆனால் தவறு செய்த அந்த ஆசிரியர் மேல் இதுவரை எந்த வித குற்ற நடவடிக்கைகள் யாதும் தொடரப்படவில்லை,ஏன் ஒரு 17பி மெம்மோ கூட வழங்கவில்லை, இதற்கு காரணம் உதவி தொடக்க கல்வி அலுவலர் கண்டு கொள்ளாமையே . அதன் பொருட்டு தற்போது அந்தஆசிரியரோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தெடுத்துள்ளார் எதற்கென்றால் என்மீது துறை நடவடிக்கையாதும் இல்லாமல் எனது ஊதிய உயர்வை தடைசெய்தது தவறு என்று எனவே இவ்வாறு தான் உள்ளது தொடக்க கல்வித்துறை, மேலும் தினமலர் செய்தி மூலம் மதுரைமாவட்டம் உசிலம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மற்றும் என்று கருதக்கூடாது, இன்னும் வெளிவராத மாவட்டங்களில் நடந்த முறைகேடுகள் இன்னும உளளன,விருதுநகர்மாவட்டம் வத்றாப் ஒன்றியத்தில் ஒரு அரசுஉதவி பெறும் பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ அங்கீகாரம் பெறமலே சுமார் 11 ஆண்டுகள் ஆதி திராவிடத்துறை மூலம் கல்வி உதவித் தொகை இன்று வரை பெற்று மாணவர்களுக்கோ பெற்றோருக்கே வழங்காமல் சுவாகத் போட்டுக் கொண்டுள்ளது, இதனை வருவாய் துறையோ தொடக்க கல்வித் துறையோ கண்டுகொள்வதே இல்லை,
by poomalai,India    8/5/2012 2:28:38 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us