சென்னை: பத்து தனியார் நர்சிங் கல்லூரிகள் உட்பட, மருத்துவம் சார் படிப்புகளை வழங்கும் 20 கல்லூரிகளில், இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை தடைவிதித்துள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., - பி.ஓ.டி., உள்ளிட்ட ஆறு மருத்துவம் சார் படிப்புகளில், இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை துவங்க உள்ளது.
இந்நிலையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத, 10 தனியார் நர்சிங் கல்லூரிகள், எட்டு பி.பார்ம்., கல்லூரிகள், பி.பி.டி., மற்றும் பி.ஓ.டி., படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் தலா ஒன்று என, மொத்தம் 20 கல்லூரிகளில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை தடைவிதித்துள்ளது.
இதனால், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் 500 இடங்கள், பி.பார்ம்.,- 400 இடங்கள், பி.பி.டி., மற்றும் பி.ஓ.டி., படிப்பில் தலா 50 இடங்கள் என, மொத்தம் 1,000 இடங்கள் வரை குறையும் என தெரிகிறது.
இதுகுறித்து, மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறும் போது, மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல், மருத்துவக் கல்வி இயக்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் சில கல்லூரிகளின் நிர்வாகம் சார்பில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, கடந்த ஆண்டு அவகாசம் கோரப்பட்டது. அவற்றின் உள்கட்டமைப்பு, இதுவரை சரிசெய்யப்படாததால், தற்போது மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறும் போது, மருத்துவ பல்கலை அளித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகள், வரும் 6ம் தேதி (நாளை) துவங்க உள்ள, மருத்துவம் சார் பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்விலிருந்து நீக்கப்படும் என்றார்.
தற்போதைய நிலவரப்படி, மருத்துவம் சார் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை விவரம்:
அரசு கல்லூரிகள்
பி.எஸ்சி., நர்சிங் 4
பி.பார்ம்., 2
பி.பி.டி., 2
தனியார் கல்லூரிகள்
பி.எஸ்சி., நர்சிங் 125
பி.பார்ம்., 26
பி.பி.டி., 21
That hits the traegt perfectly. Thanks
|
by Mohmed,India 10/7/2012 10:27:44 PM IST |
Please publish the banned college names which will be useful
|
by chitrae,India 8/5/2012 12:31:34 PM IST |