சென்னை:கால்நடை மருத்துவ படிப்புகளில், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.
கால்நடை மருத்துவ படிப்புகளில், சிறப்பு பிரிவினரான கலந்தாய்வு நேற்று நடந்தது. மொத்தம் 28 இடங்களுக்கு, கலந்தாய்வில் பங்கேற்க, 71 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு 5 இடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்கள் மற்றும் தொழில்பிரிவு மாணவர்களுக்கு 10 இடங்கள் என, மொத்தம் 21 இடங்கள் நிரப்பப்பட்டன.
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,) மற்றும் மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி.,) உள்ளிட்ட படிப்புகளில், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்கியது.
இதில், 195 முதல் 133.5 வரை, "கட்- ஆப்" மதிப்பெண் பெற்றுள்ளோர் அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 193 இடங்களுக்கு, 655 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.