மாணவனுக்கு நேர்ந்த அவலம் - ஆசிரியர்களை திருத்துவது எப்படி? | Kalvimalar - News

மாணவனுக்கு நேர்ந்த அவலம் - ஆசிரியர்களை திருத்துவது எப்படி?ஜூலை 21,2012,11:19 IST

எழுத்தின் அளவு :

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது.

அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்த அதற்குள் சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுநீர் கழித்து வர அனுமதிக்குமாறு பரத்ராஜ் ஆசிரியரிடம் மீண்டும் கேட்டார். அப்போது ஆசிரியர்கள், சிறுநீரை அதே இடத்தில் கழிக்க வைத்ததுடன் அடித்து உதைத்து பரத்ராஜை சிறுநீர் குடிக்க வைத்தாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த ஆசிரியர்கள் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டது. அதேபோல், இதுமாதிரி மனித தன்மையற்று நடந்துகொள்ளும் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்து, அவர்களின் கல்வித் தகுதிகளையும் செல்லாததாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும், தரமான கல்வித்திட்டமே, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.


வாசகர் கருத்து

இது போன்றவர்களை பணி இடைநீக்கம் செய்யாமல் பணிநீக்கம் செய்வதுடன் அவர்கள் வாழ்நாளில் ஆசிரியர் பணி செய்ய தடை விதிக்க வேண்டும். தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும்.
by ஸ்ரீ,India    7/22/2012 7:47:47 AM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us