மதுரை: பள்ளியில் முதலிடம் பெற்ற மதுரை மாணவர், மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும், கல்லூரியில் சேர பணம் இன்றித் தவிக்கிறார்.
மதுரை, காமராஜர்புரத்தைச் சேர்ந்த மாணவர் நாகராஜன். பிளஸ் 2 தேர்வில், தமிழ்- 196, ஆங்கிலம் 181, இயற்பியல்- 194, வேதியியல்- 200, உயிரியல்- 199, கணிதம்- 198 என, 1,168 மதிப்பெண் பெற்று, மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியில், முதலிடம் பெற்றார். இவரது மருத்துவ, ‘கட் ஆப்’ மதிப்பெண், 198. கவுன்சிலிங்கில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., கிடைத்தது. ஆனால், கல்லூரியில் சேர பணம் இன்றி, வேதனையில் உள்ளார்.
தந்தை கண்ணன், வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவரது தினசரி வருமானம், 130 ரூபாய். நாகராஜனுடன் பிறந்த சகோதரியும், படிக்க வழியின்றி, தாய் ராணிக்கு உதவியாக, துணிகள் தைக்கிறார். சொற்ப வருவாயில் தான், குடும்பம் நடக்கிறது. நாகராஜன், விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவுவார். இவர், பத்தாம் வகுப்பில், 493 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், 3வது இடம் பிடித்தார்.
சிலர் உதவியால், மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளார். ஏழ்மையால், மருத்துவக் கல்வி கனவு தகர்ந்து விடுமோ என்ற வேதனையில் உள்ளார். இவருக்கு உதவ விரும்புவோர், ‘கே.நாகராஜன், த/பெ எஸ்.வி.கண்ணன், 33, திருவள்ளுவர் தெரு, காமராஜர்புரம், மதுரை-9’ என்ற முகவரி அல்லது 96886 22867 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.
அக்கௌன்ட் நம்பர் மற்றும் வங்கியின் பெயர்,விலாசம் குறிப்பிட்டால் பலர் உதவ முன்வருவார்கள்.
|
by Lakshmi,India 7/17/2012 2:45:34 PM IST |