கால்நடை மருத்துவ படிப்பு: 24ம் தேதி மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

கால்நடை மருத்துவ படிப்பு: 24ம் தேதி மாணவர் சேர்க்கைஜூலை 14,2012,09:36 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 24ம் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ், சென்னை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மீன் வளக் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொடுவளி உணவு மற்றும் பால் வள தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவை செயல்படுகின்றன.

இவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன் வள அறிவியல், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு, 340 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளில் சேர, 10,821 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 544 விண்ணப்பங்கள் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, வரும் 24ம் தேதியும், மீன் வள அறிவியல், உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு, 25ம் தேதியும், கோழியின உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புக்கு, 26ம் தேதியும், கலந்தாய்வு நடைபெற உள்ளது. அழைப்புக் கடிதம், கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us