மூன்று புதிய துணைவேந்தர்கள் நியமனம் | Kalvimalar - News

மூன்று புதிய துணைவேந்தர்கள் நியமனம்ஜூலை 14,2012,09:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மூன்று பல்கலைக்கழகங்களில், காலியாக இருந்த துணைவேந்தர் பணியிடங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் துறை தலைவராக இருந்த குமரகுரு, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், மரபியல் துறை தலைவர் குணசேகரன், வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், பதிவாளர் மணிமேகலை, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் உயர்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ளது.

 


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us