ஊட்டி: பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி, மறு கூட்டலில் ஒரு மதிப்பெண் கூடுதலாக பெற்று, நீலகிரி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி பிரித்திகா, 1,200க்கு 1,159 மதிப்பெண் பெற்றிருந்தார். தமிழ்- 186, ஆங்கிலம்- 186, இயற்பியல்- 188, வேதியியல்- 199, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200, கணிதம்- 200 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இயற்பியல் பாடத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தார். இதில், இயற்பியலில் கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற்று, 189 கிடைத்துள்ளது.
இதே மதிப்பெண் பெற்றிருந்த, ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவன் நிஹால், பிளஸ் 2வில், மாவட்ட மூன்றாம் இடம் பெற்றிருந்தார்; இந்த மாணவனுடன், மாணவி பிரித்திகாவும், மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மாணவி பிரித்திகா கூறுகையில், "எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் துறையைத் தேர்வு செய்ய விரும்பினேன்; கூடுதலாக கிடைத்த ஒரு மதிப்பெண், இன்ஜினியரிங், "கட்-ஆப்' முறையில் கவுன்சிலிங்குக்கு உதவியாக இருக்கும், என்றார்.