விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு இன்றும் கவுன்சிலிங் | Kalvimalar - News

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு இன்றும் கவுன்சிலிங்ஜூலை 10,2012,09:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்றும் நடைபெறுகிறது. நேற்றைய கலந்தாய்வில் 100 பேர் சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர்.

விளையாட்டுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், 5,6ம் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டு இடங்களை, 100ல் இருந்து, 500ஆக அதிகரித்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், இந்த கவுன்சிலிங், 9,10 தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன், சான்றிதழ் சரிபார்ப்புக்கு, கூடுதலாக மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கவுன்சிலிங், நேற்று காலை துவங்கியது. 250 இடங்களை நிரப்ப, 500 மாணவ, மாணவியர் நேற்று அழைக்கப்பட்டனர். ரேங்க் பட்டியலில், டாப் வரிசையில் இடம் பெற்ற மாணவ, மாணவியர், அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரியை தேர்வு செய்தனர்.

இ.சி.இ., - எம்.இ., ஆகிய பிரிவுகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்தனர். இவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் ரமேஷ் சந்த் மீனா, சேர்க்கைக்கான உத்தரவுகளை வழங்கினார்.

நேற்று காலையிலேயே, இ.சி.இ., பிரிவில் 20 பேர், மெக்கானிக்கல் பிரிவில் 20 பேர் மற்றும் இதர பல்வேறு பாடப் பிரிவுகளில் 60 பேர் என, 100 பேர் சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். தொடர்ந்து, இன்றும் விளையாட்டுப் பிரிவு மாணவருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.


வாசகர் கருத்து

What is Mca? Mca padithal yha madhiri job pogalam
by Vinoth.N,India    7/10/2012 8:45:55 PM IST
what is the difference between industrial engineering and production engineering?
by எ henry,India    7/10/2012 7:10:22 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us