சென்னை : 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 100 பள்ளிகளை தரம் உயர்த்துவதன் மூலம், அங்கு 100 தலைமைஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்படுகின்றன.
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.