இலவச தொழிற்பயிற்சிக்கு 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

இலவச தொழிற்பயிற்சிக்கு 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்ஜூன் 17,2012,15:08 IST

எழுத்தின் அளவு :

கோவை: அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனம் நடத்தும் இலவச தொழில் கல்வியில் சேர ஆர்வம் உள்ளவர்கள், வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரசினர் தொழில் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2012-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், கம்ப்ïட்ட்ர் ஆப்ரேட்டர் புரோகிராம், வயர்மேன், வெல்டர் உள்பட 21 தொழில் பிரிவுகளில் ஆண் மற்றும் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொழில் பிரிவில் 126 இடங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

முற்றிலும் இலவசமாக நடைபெற்று வரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இன ஒதுக்கீடு மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு முறையே ரூ.1,680, ரூ.1,800, மற்றும் ரூ.2,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

8, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் நடத்தி அதன் மூலம் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 29ம் தேதிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டுப்பாளையம் ரோடு, கோவை என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

M........ Nalla pannuka. eppadi pannuna konjam aruthala erukkum.
by siva,India    6/17/2012 10:20:06 AM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us