புகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News

புகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம்ஜூன் 17,2012,07:40 IST

எழுத்தின் அளவு :

திண்டுக்கல்: புகாருக்கு உள்ளான ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ளவிடாமல், முன்னதாகவே இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அடுத்தமாதம் துவங்க உள்ளது. முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஜூலை 4, மாவட்டத்திற்குள் இடமாறுதல் ஜூலை 5 ல் நடக்க உள்ளது. ஜூலை இரண்டாவது வாரத்தில் பட்டதாரி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

ஆசிரியர்கள் மீது புகார் இருப்பின் இவர்கள் கலந்தாய்வில் பங்கு பெறுவதற்கு முன்னதாகவே இடமாறுதல் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் கேட்கும் பள்ளிகளுக்கு இடமாறுதல் தராமல், காலியாக உள்ள இடங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளே இடமாறுதல் தர உள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதலில் பணிநிரவல் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஒரே பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் இருந்தால், இவர்களில் ஒருவரை கலந்தாய்விற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

கலந்தாய்விற்கு முன்னதாக புகார் ஆசிரியர் இடமாற்றம், பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ஆகியவற்றை முடித்துவிட்டு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தால் வெளியிடப்படும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us