என் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

என் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களின் எம்.பி.பி.எஸ்., ஆர்வம் வரவேற்கத்தக்கதே. ஆனால், அதற்கான 2 ஆண்டுகள் காத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த முயற்சியில் அது கிடைக்கவில்லை எனில், அதுசார்ந்த வேறு சிறந்த துறைகளில் முயற்சிப்பதே நல்லது. பார்மசி படித்து, மருந்து தயாரிப்பு துறையில் ஈடுபடலாம். பயாலஜி படித்து பயோடெக்னாலஜி அல்லது பயோகெமிஸ்ட்ரி துறையில் ஈடுபடலாம்.

இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும், தற்போது வளர்ந்துவரும் மெடிக்கல் டெக்னாலஜி துறையிலும், நீங்கள் கவனம் செலுத்தலாம். ஆனால், எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us