சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்- 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.
இத்தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு முடிந்தபின், இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 3,475 பேர் தேர்வு செய்யப்பட்டு, இறுதி முடிவு வெளியிடப்படும்.
இதன்பின், 6,949 பேரில், 3,475 பேர் தேர்வு செய்யப்பட்டது போக, மீதியுள்ள 3,474 பேரின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மட்டும், மற்றவர்களின் மதிப்பெண்களுடன் கலக்கப்பட்டு, ஒட்டுமொத்த அளவில் மதிப்பெண் அடிப்படையில் 3,220 பேர் தேர்வு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்படும். இந்த முடிவு, ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.