பிளஸ்-2வில் சாதித்தும் பொறியியல் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர் | Kalvimalar - News

பிளஸ்-2வில் சாதித்தும் பொறியியல் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர்ஜூன் 09,2012,07:51 IST

எழுத்தின் அளவு :

சிவகாசி: பிளஸ் 2 தேர்வில் 1,090 மதிப்பெண்கள் பெற்றும், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர வழியின்றி தவிக்கிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர்.

சிவகாசி நாரணாபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் முருகன், சிவகாசி நகராட்சி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 முதல் குரூப் படித்து தேர்ச்சி பெற்றார். இவர் 1,090 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாவது இடம் பிரித்தார். இவரது இன்ஜினியரிங் கட் ஆப் மார்க் 185.50.

தந்தை பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் நாகம்மாள் பட்டாசு ஆலையில் கூலி வேலை செல்கிறார். அண்ணன் ராஜா பட்டாசு தொழிலாளி. விடுமுறை நாட்களில் முருகன் பட்டாசு ஆலை வேலைக்கு செல்வார். குடும்ப சூழ்நிலையால், மேலும் படிக்க பணவசதி இல்லாததால் , வீட்டிலே முடங்கி உள்ளார். கவுன்சிலிங் செல்ல தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உதவினார்.

இன்ஜினியரிங் இடம் கிடைத்தாலும், கல்வி கட்டணம், விடுதி கட்டணம் செலுத்த வசதி இல்லை. "உதவும் எண்ணம் கொண்டோர் உதவி செய்தால், படித்து சாதிக்க முடியும்,&' என்ற நம்பிக்கையில் முருகன் உள்ளார். உதவ விரும்புவோர் 91594 95038 என்ற எண்ணில் மாணவரையும், மேலும் விபரங்களுக்கு, 04562௨75132 பள்ளி போனிலும் தொடர்பு கொள்ளலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us