நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி காலண்டர் வெளியீடு! | Kalvimalar - News

நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி காலண்டர் வெளியீடு!ஜூன் 08,2012,10:25 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்: ஜூன் 1ல் நடப்பு (2012-13) கல்வியாண்டு துவங்கியுள்ளது. பள்ளியின் வேலை நாட்கள்; விடுமுறை, தேர்வு நாட்கள் அடங்கிய காலண்டரை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இக்கல்வியாண்டில், உள்ளூர் விடுமுறை, தேர்வு நாட்கள் தவிர, மொத்தம் 183 நாட்கள் வகுப்புகள் செயல்படும்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் நடப்பு (2012-13) கல்வியாண்டு உதயமாகியுள்ளது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது.

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் செயல்பட வேண்டிய மொத்த நாட்கள், விடுமுறை, தேர்வு நாட்கள், வகுப்பு நடத்த வேண்டிய நாட்கள் அடங்கிய, 2012 ஜூன் முதல் 2013 ஏப்., வரையிலான பள்ளி காலண்டர் தயாரித்து கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, இம்மாதம் சனி, ஞாயிறு தவிர்த்து 21 நாட்கள் பள்ளி செயல்படும்; ஜூலையில் 22 நாட்கள்; ஆக., 21 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். செப்., 12 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு; 6 முதல் 8ம் வகுப்பு முதல் பருவத்தேர்வுகள் துவங்கும். அம்மாதம் 22ல் தேர்வு நிறைவடைந்ததும், 23 முதல் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை. அக்., 3ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்; காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, பக்ரீத் பண்டிகை விடுமுறை தவிர, மொத்தம் 19 நாட்கள் பள்ளி செயல்படும்.

நவ., மாதத்தில் சனி, ஞாயிறு தவிர 13ம் தேதி தீபாவளி, 25ல் மொகரம் பண்டிகை விடுமுறை அளிக்கப்படுகிறது; மொத்தம் 21 நாட்கள் செயல்படும். டிச., மாதம் 14ம் தேதி பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு; 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வு துவங்கும். 22ல் தேர்வு முடிவடைந்து, டிச., 23 முதல் 2013 ஜன., 1 வரை 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை. ஜன., 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்; 19 நாட்கள் செயல்படும். பிப்., மாதம் சனி, ஞாயிறு தினங்கள் தவிர, 20 நாட்கள் பள்ளி செயல்படும். மார்ச் 11ல் பிளஸ் 1 தேர்வு துவங்கி, 22ம் தேதி நிறைவடையும்.

இம்மாதம் 25ல் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு துவங்கும். ஏப்., மாதம் 10ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு துவங்கி, 20ல் நிறைவடையும். அனைத்து தேர்வும் நிறைவடைந்து, ஏப்., 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில் மொத்த நாட்கள் 210; உள்ளூர் விடுமுறைக்கு அனுமதிக்கப்படும் நாட்கள் 3; தேர்வு நடத்த வேண்டிய நாட்கள் 24; பள்ளி செயல்பட வேண்டிய மொத்த நாட்கள் (உள்ளூர் விடுமுறை தவிர) 207 நாட்கள்; வகுப்பு நடத்த வேண்டிய நாட்கள் (தேர்வு நாட்கள் தவிர) 183 நாட்கள், என, பள்ளி காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

சூப்பர்...
by Joel,India    6/9/2012 2:20:44 AM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us